6/recent/ticker-posts

மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும் - இயக்குனர் பாலாவுக்கு அருண்விஜய் எக்ஸ் பதிவு

மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும் - இயக்குனர் பாலாவுக்கு அருண்விஜய் எக்ஸ் பதிவு



தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான இடத்தை உருவாக்கி வருபவர்களில் முன்னணி நடிகர் அருண் விஜய் முக்கியமானவர். தனது சொந்த திறமையும் கடின உழைப்பின் மூலம் வெற்றியை தட்டிச் சென்றவர், இன்று தமிழ் சினிமாவின் பல்வேறு பரிமாணங்களில் அசாத்திய வளர்ச்சியை கண்டுள்ளார்.

அருண் விஜயின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மாறுபாடு 2015ஆம் ஆண்டு வெளியான 'என்னை அறிந்தால்' படத்தில்தான் ஏற்பட்டது. அஜித் குமாரின் எதிரியாக நடித்து, அந்த கதாபாத்திரத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பிரபலமாகி சென்றார். அந்த படம் அருண் விஜயின் திரை வாழ்க்கையைத் திருப்புமுனையாக மாற்றியது.

தற்போது இயக்குனர் பாலா இயக்கதில் வணங்கான் படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் தான் நடித்ததை பற்றி நடிகர் அருண் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவை போட்டு இருக்கிறார்.

அதில், மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் திரு. பாலா சார் அவர்களுக்கு,

Also Read கௌரவ டாக்டர் பெற்ற ஆக்ஷன் கிங் அர்ஜூன் - 50 ஆண்டுகளை நிறைவு செய்த அர்ஜூன்


நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக "எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா" என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற 'வணங்கான்' படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன்.

எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை!

இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும் திரு. சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும்... உங்கள் அருண் விஜய்.

Post a Comment

0 Comments