6/recent/ticker-posts

வேட்டையன் பட ரிலீஸ் பற்றி லைக்கா நிறுவனம் வெளியிட்ட படத்தின் முக்கிய அப்டேட் ....



Vettaiyan release date: T J ஞானவேல் இயக்கத்தில் லைக்கா தயாரித்துள்ள வேட்டையன் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாஸில் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.அனிருத்தின் இசையில் உருவாகிறது  இந்த படம்.




நடிகர் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் வெளிவந்த ஜெய்லர் படம் வசூல் ரீதியிலும், ரசிகர் மத்தியிலும் செம ஹிட் ஆனது. அதன் பின் நடித்த லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் ரஜினி. ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.


ஜெய் பீம் என்ற படத்தை கொடுத்த இயக்குநருடன் ரஜினிகாந்த் கூட்டணி அமைத்திருப்பதால் வேட்டையன் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

வேட்டையன் படத்தின் முதல் சிங்கிள் லிரிக் 'மனசிலாயோ' வீடியோ நேற்று வெளியானது. மலேசியா வாசுதேவனின் குரல் ஏஐ தொழில்நுட்பம் மூலம் பாட வைத்துள்ளனர்.. படத்தின் இசை வெளியீடு விழா இந்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 ஆயுத பூஜை விடுமுறை தொடர் விடுமுறை காரணமா  அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் படம் வெளியாகிறது. வேட்டையன் படத்தின் ஹிந்தி  திரைப்படம் மற்றும் setilite உரிமையை இன்பாக்ஸ் பிக்சர் மற்றும் baweja studio வாங்கியுள்ளது என லைக்கா ப்ரொடக்ஷன் அறிவித்துள்ளது .

Post a Comment

0 Comments