என் கணவரிடம் மனம் விட்டு பேச அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. - நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி
(Aarti Ravi)நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து குறித்த அறிக்கையை வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்து நிலையில் தற்போது இத்தம்பதியால் ரசிகர்களுக்கு இன்னொரு பெரிய அதிர்ச்சியும் நிகழ்ந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் இல்லா நடிகராக வலம் வந்தவர்களில் ஒருவர் ஜெயம் ரவி.இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த எந்த படங்களும் சரியான வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக திடுக்கிடும் செய்தியை வெளியிட்டார்.
எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது மிகவும் கடினமான ஒரு முடிவு. இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டது அல்ல. என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது என தனது அறிக்கையில் கூறிருந்தார் .
இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி தனது தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில் முழுக்க முழுக்க என் ஒப்புதல் இல்லாமல், கவனத்திற்கு வராமல் தான் இது வெளியாகி இருக்கிறது. கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் கண்ணியத்தை தொலைத்து விட்டதாக நினைக்கிறேன். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு அவராக எடுத்ததே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல.
என் கணவரிடம் மனம் விட்டு பேச என் கணவரை சந்திக்க நான் சமீப காலமாக பலவித முயற்சிகளை செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என்னுடைய குழந்தைகளும் என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்.
என்று தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
0 Comments