ரத்தம் தெறிக்க தெறிக்க மிரட்டிய நயன்தாரா - வெளியான ராக்காயி படத்தின் டீசர்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழில் வெளியான ஐயா என்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கிய நயன்தாரா 2005 ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார்.
இன்று தனது 40 வது பிறந்த நாளை கொண்டாடும் நயன்தாரா கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இன்று நடிகை நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு Nayanthara: Beyond the Fairy Tale என்ற ஆவணப்படம் netflix ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கின்றது.
Read Also :வெளியானது புஷ்பா 2 படத்தின் ட்ரெயிலர் - கொண்டாடத்தில் ரசிகர்கள்.
இந்த அவணபடத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த நடிகர் தனுஷ்க்கும் – நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு கருத்து வேறுபாடு இருந்தது.
இந்த நிலையில் இன்று நயன்தாரா நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள ராக்காயி படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளனர். செந்தில் நல்லசாமி இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையில் டீசர் வெளியாகி உள்ளது.
0 Comments