வெளியானது புஷ்பா 2 படத்தின் ட்ரெயிலர் - கொண்டாடத்தில் ரசிகர்கள்.
நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ,சுனில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான புஷ்பா 1 படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. இந்த படத்திற்க்கு நடிகர் அல்லு அர்ஜூன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கினார்.
புஷ்பா படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் கேரியர் மிக பெரிய ஹிட்டாக அமைந்த படம் புஷ்பா. மரக்கடத்தலை மையமாக கொண்டு இந்தப் படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் சுகுமார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தின் அறிவிப்பை மேற்கொண்ட படக்குழுவினர் படத்தின் சூட்டிங்கை தற்போது எடுத்து முடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியே இந்தப் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் பாடல் காட்சி உள்ளிட்ட சில சூட்டிங் மீதமிருந்ததால் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தள்ளி வைத்திருந்தனர்.
இந்நிலையில் படம் டிசம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று படத்தின் ட்ரெயிலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தின் ட்ரெயிலர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது
0 Comments