15 வருடங்களுக்குப் பிறகு இணையும் காமெடி கூட்டணி சுந்தர்.சி - வடிவேலு - கைப்புள்ள வடிவேலு ரிட்டர்ன்
சுந்தர்.சியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது சுந்தர்.சி அடுத்து கேங்கர்ஸ் என்ற படத்தை இயக்க உள்ளாராம். வடிவேலு - சுந்தர்.சி கூட்டணி.
தமிழ் சினிமாவின் நகைச்சுவை கிங் என்று சொன்னால், முதலில் நினைவுக்கு வருவது வடிவேலு தான். வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை நடிப்பால் பிரபலமானவர். வடிவேலு கதாபாத்திரங்கள் பொதுவாக குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும், அவருடைய ஒவ்வொரு வசனமும் சமூக வலைதளங்களில் மீம்ஸ் ஆகிவிடுகிறது.
தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் சுந்தர் . சி கூட்டணி என்றால், நிச்சயம் சிரிப்பு திருவிழா தான். சுந்தர் . சி இயக்கத்தில் வடிவேலு நடித்த பல படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளன.
வடிவேலு மற்றும் சுந்தர் . சி இணைந்த திரைப்படங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்து, குடும்பங்களில் நீண்ட காலம் பேசப்படும் படங்களாக மாறியுள்ளன. உதாரணமாக சுந்தர்.சி இயக்கத்தில் கிரி, வின்னர், நகரம் மறுபக்கம் ,தலைநகரம் என பல படங்களில் வடிவேலுவின் காமெடி நன்றாக இருக்கும்.
அதிலும் வின்னர் படத்தில் வடிவேலுவின் கைப்புள்ள கதாபாத்திரம் இன்றுவரை மக்கள் மத்தியில் பேசபடுகிறது. அதே போல் கிரி படத்தில் வரும் வீரபாகு கதாபாத்திரம் பேக்கரி காமெடிக்கு இன்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இந்நிலையில் மீண்டும் சுந்தர் சியும், வடிவேலுவும் இணைகிறார்கள். கேங்கர்ஸ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. சுந்தர்.சி இயக்கியிருக்கிறார் இதில் கேங்கர்ஸ் சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வடிவேலு.
0 Comments