6/recent/ticker-posts

காதல் கல்யாணம்

காதல் கல்யாணம்



பகுதி 1 படிக்க - ராம் மற்றும் சீதா இடையே எப்படி காதல் மலர்ந்தது. அதைப் படிக்க


சீதா: ராம் நம்ப ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா .

ராம்: கண்டிப்பா சீதா, நான் உங்க வீட்ல வந்து பேசுறேன். ஆமாம் காலேஜ்ல இருந்து உங்க வீட்டு பத்தி எதுவுமே தெரியாது. உங்க வீட்ல யாரெல்லாம் இருக்கா.

சீதா: நானும் அண்ணா மட்டும்தான் இருக்கோம் . சின்ன வயசிலேயே எங்க அப்பா அம்மா இறந்துட்டாங்க. எங்க அண்ணன் தான் என்னைய படிக்க வச்சது.

ராம்: சாரி சீதா, ஆமாம் உங்க அண்ணன் என்ன பண்றார்.

சீதா : அவருக்கு ஒரு எஸ்டேட்ல மேனேஜரா வேலை செய்கிறார்.

ராம்: ஓ நல்லதா போச்சு, உங்க அண்ணா இப்போ ஏற்காட்டில் தான் இருக்கிறாரா.

சீதா: இல்ல ராம், அவர் ஊட்டில ஒரு டீ எஸ்டேட்டில் வேலை செய்றார்.

ராம்: அது சரி அப்ப நீங்க என்ன பண்ற, உங்க அண்ணா உன்னை வெளியே செல்லலாம் அனுமதிப்பாரா.


சீதா: அண்ணா அதெல்லாம் கொடுக்க மாட்டாரு, நான் இப்ப காலேஜ்ல பைனல் இயர் படிக்கிறேன். அதனால ஃபிரண்ட்ஸ் கூட வந்த நாங்க வந்தது என் அண்ணனுக்கு தெரியாது, சீக்கிரமாக கிளப்பி கோயமுத்தூர் போயிருவோம் அங்கதான் படிச்சிட்டு இருக்கேன் ஒரு காலேஜ்ல

ராம்: என்ன இன்னும் படிச்சிட்டு இருக்கியா.

சீதா: மாஸ்டர் டிகிரி படிச்சிட்டு இருக்கேன்.

ராம் : சரி மறுபடியும் நம்ம எப்படி மீட் பண்றது. நீ கோயம்புத்தூர்ல இருக்க நான் சேலத்தில் இருக்கேன்.

சீதா: என்னோட படிப்பு முடிய இன்னும் ரெண்டு மாசம் இருக்கு.

நீ அதுக்குள்ள கோயம்புத்தூர்ல ஏதாவது வேலையில ஜாயின் பண்ணிரு.

ராம்: சரி சீதா, கண்டிப்பா ஜாயின் பண்றேன். நாம எப்படி பேசுறது

சீதா: மொபைல் நம்பரை தருகிறாள். ஆனா நீயா கால் பண்ணாத நான் பண்ணா பேசு.

(அந்த சமயம் சீதாவின் போன் அடிக்க, அவரது ஃப்ரெண்ட் சீதா கிளம்பலாம் எங்க இருக்க.சுதா நான் அங்கே தான் இருக்கேன் நீ சீக்கிரம் வந்துரு நான் வந்துடுறேன்.)

சீதா: சரி ராம் நான் கிளம்புறேன், சீக்கிரமா நீ கோயம்புத்தூர் வந்துரு அங்க நம்ம மீட் பண்ணலாம். கண்டிப்பா வந்துருவதானே..

ராம்: கண்டிப்பா சீதா,

(சீதா அங்கிருந்து கிளம்பினாள், ராம் தனது வீட்டிற்கு வந்தான் அப்பொழுது ராம்  போன் ரிங் அடிக்க)

ராம்: ஹலோ சீதா.

சீதா: ராம் நாங்க பஸ் ஏறிட்டோம், நான் ஹாஸ்டல் போயிட்டு உனக்கு போன் பண்றேன். பிரண்ட் கூட இருக்கா பேச முடியாது

ராம்: சரி சீதா, பார்த்து போயிட்டு வா நானும் சீக்கிரம் வந்துடுறேன்.

இரவு 10:00 மணி, ராம் போன் ரிங் ஆனது

ராம்: சீதா எங்க இருக்க, ரீச் ஆயிட்டீங்களா.

சீதா: ஆமாம் வந்துட்டோம். எனக்கு ரொம்ப களைப்பாக  இருக்கு . நாளிலிருந்து எங்களுக்கு ஃபைனல் எக்ஸாம் ஸ்டார்ட் ஆயிரும் உன் போன்ல பேச மாட்டேன் . நீ கூடிய சீக்கிரம் எங்க ஏதோ ஒரு வேலையை பார்க்க ஸ்டார்ட் பண்ணு நான் காலேஜ் முடிக்கிறதுக்குள்ள நம்ம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்.

ராம்: சீதா நான் வேணா என் அப்பா அம்மாகிட்ட சொல்லி உங்க அண்ணன்கிட்ட பேச சொல்லவா.

சீதா: ராம்..எங்க அண்ணனை பத்தி எனக்கு நல்லா தெரியும். அவர் ஒத்துக்க மாட்டார். அப்புறம் நீ என்னை மறக்க வேண்டியது தான்.

ராம்: சரி நான் சீக்கிரம் ஏதாவது ஒரு வேலையில் ஜாயின் பண்ற.

(சரியாக 10 நாட்கள் செல்ல, அங்கு ஒரு தனியார் அலுவலகத்தில் மேனேஜராக வேலையில் சேர்ந்தான். அவ்வபோது ராம் சீதா இருவரும் வெளியில் சென்று வந்தனர். தனது கல்லூரி முடிவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால். ராம் சீதா இருவரும் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் கல்யாணம் செய்து கொண்டனர்)

ராம் : சீதா அடுத்தது என்ன பிளான், உங்க அண்ணன் கிட்ட பேசுவோமா

சீதா: ராம் கொஞ்ச நாள் நான் என் அண்ணன் கூட இருக்க, நான் சொல்லும்போது என் அண்ணன் கிட்ட வந்து பேசு, ஒரு ஒத்துகிட்டா மேரேஜ் பண்றதை சொல்லி நான் வந்துடுறேன். இல்லைனா அண்ணனுக்கு நம்பர் மேரேஜ் பத்தி சொல்லிடலாம்.

ராம் : அப்ப மட்டும் உங்க அண்ணன் ப்ராப்ளம் பண்ண மாட்டாரா,

சீதா : இல்லை ராம், உங்களை மேரேஜ் பண்ணி கொஞ்ச நாள் ஆகும் இல்லையா அதனால எதுவும் ப்ராப்ளம் வராது பார்த்துக்கலாம்.

ராம் இன்னொரு முக்கியமான விஷயம். நாளைக்கு எனக்கு காலேஜ்ல கடைசி நாள். எங்க அண்ணன் வந்துரும் என்னை கூட்டிட்டு போக.

நீ அதுக்குள்ள நம்ம தங்குறதுக்கு நல்ல வீடா பார்த்து வை, நான் அங்க போயிட்டு அண்ணன் கிட்ட ஏதாவது பேச முடியுமான்னு பார்க்கிறேன்.

என் அண்ணன் மாசம் ஒரு முறை கோயம்புத்தூர் வரும், அப்ப முடிஞ்சா நானும் வரேன் நம்ம மீட் பண்ணலாம். சரியா

ராம்: சீதா, நம்ப ஏதோ தப்பு பண்றோம்னு தோணுது.

சீதா: எல்லாமே நல்லபடியா நடக்கும்.. சரி நான் லேட்டாக போனா ஹாஸ்டல்ல கண்டுபிடிச்சுடுவாங்க. நான் கிளம்புறேன்.


ராம் : சீதா , இன்னைக்கு நம்ம கல்யாணம். கொஞ்ச நேரம் கூட இருக்க கூடாதா.

சீதா: இனிமே உன் வாழ்க்கைல உன்கிட்ட தான் இருப்பேன் எனக்காக பொறுத்துக்கோ ஐ லவ் யூ வீட்டு கிளம்புகிறாள்.

(கல்லூரி முடிய, சீதாவை அவளது அண்ணன் அழைத்து செல்கிறான். இப்படியே ஒரு 15 நாட்கள் செல்கிறது.)


பகுதி 3 படிக்க - காதல் கல்யாணம் 


தொடரும்....

Post a Comment

0 Comments