காதல் கல்யாணம்
இடம் : ஊட்டி பஸ் ஸ்டண்ட் விடியற்காலை 5 மணி,
செல்வம் : என்னமா ? இன்னிக்கு இவ்வளவு கூட்டமா இருக்கே ,
பஸ்ல இடம் கிடைக்குமா?
சீதா: என்ன அண்ணா நீயே . இப்படி
கேக்கற? ஏன் உனக்கு தெரியாத , வாரம் வாரம் நீ தானா இங்க இருந்து தான கோயம்பத்தூர்
போயிட்டு வர ?
செல்வம் : ஆமாம்மா, ஆன வழக்கதை
விட கூட்டம் அதிகமா இருக்கே ? நான் மட்டும் போறதுனா கூட நான் சமாளிச்சிருவேன் . ஆன நீயும் வரதுனால தான் கொஞ்சம் யோசனையா இருக்கு
..
சீதா : அதுலாம் இடம் கிடைக்கும்
அண்ணா,
செல்வம்: நானும் நீ வரவேண்டாம்
சொன்ன, நீ சொன்ன எங்க கேக்க போற ? உன் ஃப்ரெண்ட் பார்த்தே ஆகணும் அடம் பண்ற .
சீதா : அண்ணா ?
செல்வம் :சரிமா கோவம் படாத நான்
எதும் கேட்கல ..
(இருவரும் அமைதியான சற்று
நேரத்தில் கோயம்பத்தூர் பஸ் வர அனைத்து கூட்டமும் பஸ்ஸை நோக்கி செல்ல ,செல்வம் ஓடி
சென்று இருவர் அமரும் சீட்டில் இடம் பிடித்தான்.)
செல்வம் : சீதா இங்க வா என்று தன் தங்கையை அழைத்ததான்.
சீதா : பஸ்ஸில் ஏறினால் , அண்ணா நான் தான் ஜன்னல் ஓரம்
நீ இந்த பக்கம் வா என்று சொன்னாள் ..
செல்வம் : சரி சரி, என்று தள்ளி
அமர்ந்தான் .
(பஸ் கண்டக்டர் அப்போது வர, அண்ணே ரெண்டு கோயம்பத்தூர் கொடுங்க என்று டிக்கெட் எடுத்தான் பஸ் கிளம்ப
ஸ்டார்ட் ஆனது )
சீதா : அண்ணே உங்க ஓனர் கிட்ட பேசினாயா என்ன
சொன்னாரு?
செல்வம்: எங்கமா அவர் எதுமே
சொல்ல மாட்டங்கராரு, உன் படிப்புக்கு வாங்கின கடனை கட்டனும் சொல்லிட்டாறு. இல்லைனா
சம்பளத்துல பிடிசிப்பனு சொல்லிட்டாறு.
சீதா : என்ன அண்ணா சொல்லற? சம்பளத்தை பிடிச்சா எப்படி
சமாளிக்கறது.
செல்வம்: அதே தான் நானும்
யோசிக்கிட்டு இருக்கேன். ஆமா உன்கிட்ட
கேக்கணும் நினைச்சேன்.
சீதா : என்ன அண்ணா கேளு?
செல்வம் : அது என்ன மாசம் மாசம்
உன் பிரெண்ட் ரம்யாவை பார்க்க நீ தான் வந்துட்டு இருக்க ஆன உன்
ஃப்ரெண்ட் ஒரு டைம் கூட நம்ப வீட்டுக்கு வரல ,
சீதா : (சிறிது பதத்ததுடன்) அண்ணா , நான் தன் அப்பவே
சொன்னேன்ல , அவ வீட்டுல வெளிய விடமாட்டாங்க ? அதும் இல்லாம நீ தான் கோயம்பத்தூர்
வர அதனால தானா நானும் வரன்.
செல்வம் : உனக்கு சீக்காரமா
கல்யாணத்தை பண்ணிறனும்
சீதா : அதுக்கு என்ன இப்போ
அவசரம். இருக்கிற பிரச்சனை போதாதா?
செல்வம்: அதுக்குனு கல்யாணம்
பண்ணாம இருக்க முடியுமா? உனக்கும் வயசு ஆகிட்டே போகுது.
சீதா : அண்ணா எனக்கு தலைவழிக்குது டீ குடிக்கணும்.
செல்வம் : அப்படியே காலைல
ஏதாவது சாப்பிடலாம் என்று ஹோட்டல் சென்றனர்.
ஹோட்டல் சப்ளையர் : என்னங்க
வேணும்?
செல்வம் : எனக்கு ரெண்டு இட்லி,
உனக்கு என்று சீதாவிடம் கேட்க
சீதா : அண்ணா எனக்கு ஒரு தோசை
என்று சொன்னாள் .
செல்வம் : இங்க பாரு சீதா நான் போய்ட்டு , கலெக்ஷன் வேலையை முடிச்சிட்டு 2 மணிக்கு எல்லாம்
வந்துருவன். நீயும் சீக்கிரமா வந்துரு. கலெக்ஷன் பணம் வேற இருக்கும் நேரம நம்ப
கிளம்பனும் என்று சொல்லும் பொது
ஹோட்டல் சப்ளையர் : வேற ஏதாவது
வேணுமா?
செல்வம்: ரெண்டு டீ,
சீதா : அண்ணா பணம் பத்தி இப்படி சத்தமா பேசாத ஊர்
கேட்டு போட்ட இருக்கு..
(இருவரும் சாப்பிட்டு அங்கிருந்து
கிளம்பினார்கள். மீண்டும் செல்வம், சீதா லேட் பண்ணாத நேரம வா என்று சொன்னான். )
செல்வம் : அங்கிருந்து ஆட்டோ
கூப்பிட்டான், கணபதி போகணும் எவ்ளோ ஆகணும் .
ஆட்டோகாரர்: 200 ஆகும் ..
செல்வம்: சரி போகலாம் என்று
ஆட்டோவில் ஏறினான்.
(சீதா அவன் செல்லும் வரை காத்துக்கொண்டிருந்தாள் ,
ஆட்டோ சீதா வின் கண்ணிலிருந்து மறைய ஆரம்பித்தது )
சீதா : தனது போனில் , ரம்யா என்ற நம்பர் க்கு கால்
செய்ததால். ஹேய் ! எங்க இருக்க நான்
வந்துட்டேன். சீக்கிரம் வா ? அண்ணன் 2 மணிக்கு எல்லாம் வந்துரும் என்று
சொல்லிட்டு ஃபோன் வைக்கிறாள்.
சற்று நேரத்தில் , சீதா வை அருகில் ஒருவன் பைக்கை வேகமாக கொண்டு வந்து
நிறுத்த.
சீதா : (பயந்து போனாள் ) , ஹேய், ஆள் நீக்கறது
தெரியலய இப்படி வந்து நிறுத்தர என்று கோவமாக கேட்க
(பைக்கில் இருந்தவன் ஹெல்மட்டை
கழட்டினான் )
சீதா : உடனே , Hey லூசு ராம் , நீ தானா, ரொம்ப
பயந்துட்டேன் தெரியுமா? என்ன பைக் புதுசா இருக்கே
ராம் :ஆமாம் போன மாசம் தான் வாங்கினேன், சரி வா போகலாம்
சீதா : ம்ம்ம் , எங்க போறது , அண்ணனும் கூட வந்து
இருக்கு எங்காவது பார்த்துட்ட அவ்வளோ தான்.
ராம் : ஹேய் , நான் உன் Husband, உங்க அண்ணா பார்த்த என்னவாம் ,இன்னும் எவ்ளோ நாள் இப்படியே
இருக்கிறது. பேசாம பைக்ல உக்காரு .
சீதா : தனது துப்பட்டவை கொண்டு முகத்தை மூடிக்கொண்டு
பைக்கில் அமர்ந்தாள்.
(இருவரும் பைக்கில் சென்றனர்.
அப்போது )
சீதா : ஹேய், அண்ணா எனக்கு
கல்யாணம் பண்றத சொல்லிட்டு இருக்கு.நம்ப சீக்கிரமா அண்ணா கிட்ட பேசணும்.
ராம் : அதான் உன் அண்ணன் இங்க
தானே இருக்காரு, இன்னைக்கே பேசிறலாம்
சீதா : கோவமாக உனக்கு எப்பவும் விளையாட்டு தான் ,
(பைக் ஒரு ஹோட்டல் முன்னே
நின்றது)
ராம் : சரி வா உள்ளே போகலாம்,
சீதா : ஹோட்டல் எல்லாம் வேணாம், அண்ணன் வந்த பிரச்சனை ஆகிரும்.
ராம் : அதுலாம் எதும் ஆகாது. உங்க அண்ணனுக்கு இந்த
ஹோட்டல் எல்லாம் தெரியாது.. இங்க தான் ரொம்ப நேரம் உக்காந்து பேச முடியும்.
(இருவரும் ஹோட்டல் உள்ளே சென்று
அமர்ந்தனர் )
ஹோட்டல் வெயிட்டர் : sir, என்ன வேணும்?
ராம் : ரெண்டு ஆப்பிள் மில்க்ஷேக் ..
ஹோட்டல் வெயிட்டர் : ஓகே sir , வேற ஏதாவது.
ராம் : ஃபர்ஸ்ட் இது கொடுங்க ..
(வெயிட்டர் ஆர்டர் எடுத்து
கொண்டு உள்ளே செல்கிறான். )
சீதா : அண்ணா
கிட்ட எப்படி, எப்போ பேசறது.? அண்ணன் வேற எனக்கு கல்யாணம் பண்றத சொல்லிட்டு
இருக்கு?
ராம் : எதுக்கு இப்போ பயப்படரா.. நான் அம்மா,அப்பா கிட்ட
உன்னை பத்தி பேசிட்டேன். அம்மா ,அப்பா ரெண்டு பெரும் அடுத்த வாரம் இங்க வருவாங்க
அப்பா நான் உன் வீட்டுக்கு வந்து உங்க
அண்ணா கிட்ட பொண்ணு கேட்கிறேன்.
சீதா : (சிறு சிரிப்புடன் )நிஜமாவ ..
(இருவரும் மணி கணக்கில் பேச, சீதா
தேடிரென்று தனது கடிகாரத்தை பார்க்க )
சீதா : சரி கிளம்பலாம் , அப்பறம் லேட் ஆகிரும் நான்
இங்க இருந்து ஆட்டோல போய்கிறேன் .
ராம் : இல்லை இல்லை நானே கொண்டு
வந்துவிடரன்
சீதா : இல்லை ராம் , அண்ண நம்பல
பார்த்துட்ட அவ்வளவு தான்.
ராம் : சரி அப்பறம் உன் விருப்பம். என்று ஒரு ஆட்டோவை அழைத்து சீதா வை அனுப்பிவைத்தான் .
(சீதா சரியாக காந்திபுரம் அருகில் வர , சீதா ஃபோன் ஒலித்தது,)
சீதா : ஹலோ. அண்ணா
செல்வம்: சீதா எங்க இருக்க , நான் பஸ் ஸ்டண்ட் வந்துட்டேன்.
சீதா : அண்ணா நானும் வந்துட்டேன், நீ எங்க இருக்க?
செல்வம்: பஸ் ஸ்டண்ட்க்கு வெளிய ஆனந்த் ஹோட்டல் அங்க இருக்கேன், இங்க வா
மதியம் சாப்பாடு சாப்பிட்டு கிளம்பலாம்.
சீதா : சரி அண்ணா, என்று ஹோட்டல்க்கு செல்கிறாள்.
(இருவரும் ஹோட்டல்க்குள் சென்று
சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பிக்கும் பொது )
செல்வம்: என்னமா, ரம்யா வீட்டுக்கு
போய்ட்டு வந்துட்டாய . என்று கேட்க உடனே
சீதா : (மனதில் ஒரு வேலை அண்ணன்
பார்த்துட்டோ ) கொஞ்சம் நடுக்கிய குரலில் போட்டு வந்துட்டேன் அண்ணா.
செல்வம்: சரிமா, அடுத்த முறை ரம்யாவை நம்ப வீட்டுக்கு வர சொல்லு
சீதா : சரி அண்ணா (ராம் பத்தி சொல்லிவிடலாம் என்ற எண்ணம் சீதா மனத்தில் ). மீண்டும் அண்ணா என்று சொல்ல
செல்வம்: என்னமா ?
சீதா : உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் ,
செல்வம் : என்னமா .. சொல்லு ஏன்
முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு .
சீதா : (மனதில் ரொம்ப பயத்துடன்
) ஒண்ணும் இல்லை அண்ணா .
செல்வம்: என்னமா .. ரம்யா பத்தி
பேசனுமா?
சீதா : ரொம்ப அதிர்ச்சியுடன் , அண்ணா ?
செல்வம் : எனக்கு தெரியுமா.. என்கிட்ட
போய் சொல்லிட்டல .
சீதா : அண்ணா ,என்று கண்ணில் நீர் வர ,
செல்வம்: இப்போ எதுக்கு அழர,
கண்ணை துடை என்றதும்.
(சீதா தனது துப்பட்டவாள் கண்ணை துடைக்கிறாள். அப்போது )
செல்வம்: வாங்க ராம் ,
உங்களுக்கு தான் காத்து கொண்டிருக்கிறேன் என்றதும்
(சீதா க்கு தூக்கி வரி போட்டது,
உடனே திரும்பி பார்த்தால் , அங்கு ராம் அவர்கள் அருகில் வந்தான் )
செல்வம்: (ஹோட்டல் சப்ளையர்
அழைத்து,) ராம் உங்களுக்கு என்ன வேணும்
ராம் : அது எல்லாம் வேண்டாம்
,இப்போ தான் சாப்பிட்டேன்
செல்வம் : அதான் எனக்கு
தெரியுமே, இங்க பாருங்க உங்க கூட தன் சீதா வும் சாப்பிட்ட அவளும் தானா சாப்பிடரா
நீங்களும் சாப்பிடுங்க ..
சீதா : (மிகுந்த பயம் ) அண்ணன் நம்பல பார்த்துட்டு
(செல்வம், ராம் க்கு ஆர்டர்
செய்து மூவரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது )
செல்வம்: எவ்ளோ நாளா இது
நடக்குது.
ராம் : காலேஜ்ல இருந்து பழகிணோம்.
செல்வம் : இங்க பாருங்க ராம் ,
ஏன் தங்கச்சி விருபத்துக்கு மாற நான் எதும் பண்ண மாட்டேன். ஆன இப்போ நிரயா செலவு
பண்ணி எங்கள கல்யாணம் பண்ண முடியாது. நீங்க பெரிய இடம் மாதிரி இருக்கிறீங்க நீங்க
வரதட்சனை ஏதாவது நிறைய கேட்ட இப்போ எங்கள பண்ணமுடியாது.
ராம் : இல்லை இல்லை, எங்களுக்கு
வரதட்சனை எல்லாம் வேண்டாம் . உங்க சம்மதம் மட்டும் போதும். நான் நல்ல உங்க
தங்கச்சியை பார்த்துப்பேன் .
செல்வம்: உங்க அம்மா அப்பா
எல்லாரும் எங்க இருங்கங்?
ராம் : ஏன் சொந்த ஊர் sசேலம் பக்கத்துல
இருக்கு, அம்மா அப்பா அங்க தான் இருக்காங்க. நான் மட்டும் தன் இங்க இருக்கேன் ,
மாசம் ஒரு டைம் அம்மா வந்து கொஞ்சம் நாள் கூட இருப்பாங்க ..
செல்வம்: உங்க குடும்பத்துல
என்ன சொன்னாக.
ராம் : அம்மா அப்பாக்கு எல்லாம்
ஓகே தான், அவங்க அடுத்த வாரம் வருவாங்க ,அப்போ முறைபடி வந்தது பொண்ணு கேட்கிறேன்.
செல்வம்: என்ன சீதா சந்தோஷமா ,
(சீதா க்கு ஒன்றும்
புரியவில்லை, அண்ணாக்கு எப்படி தெரியும், எங்க ராம் ஐ பார்த்து பேசிங்க என்று மனதில் 1000 கேள்விகள்,
ஆனால் ராம்க்கு , சீதா அவள் அண்ணாவை பற்றி சொன்னது அனைத்தும் பொய்யாக தெரிந்தது.)
செல்வம்: சீதா , என்ன யோசனை,
எனக்கு எப்படி ராம் ஐ தெரியும் னா?
சீதா : ஆமாம் என்பது போல் தலை அசைத்தால்.
செல்வம்: சரிங்க ராம் , நாங்க
நேரம ஊர்க்கு போகணும் ,
ராம் : அதுக்குள்ள என்ன அவசரம்
,கொஞ்ச நேரத்துக்கு அப்பறம் போகலாம்ல.
செல்வம்: இல்லைங்க ராம் , இன்னைக்கு கலெக்ஷன் பணம் என்கிட்ட தான் இருக்கு , பணம்
கொஞ்சம் அதிகமா இருக்கு , ஓனர் கிட்ட போய் கொடுக்கணும் .
(என்று சொல்லும் பொது எதிர்
டேபிளில் இருந்த இருவர் , செல்வத்தை
பார்த்து ஏதோ சைகை செய்து கொண்டிருந்தனர். )
ராம் : சரிங்க, அப்போ நீங்க
கிளம்புங்க, அடுத்த வாரம் குடும்பத்தோட நான் அங்க வரேன்.
சீதா , செல்வம் ஒருவரும் ஊட்டி செல்லும் பஸ்ஸில் ஏற, ராம் அவர்களை வழி அனுப்பி வைத்தான். அவர்கள்
சென்றதும் ராம் , எதிர் டேபிளில் அமர்ந்து இருந்த இருவரிடம் ஏதோ
பேசிக்கொண்டு இருந்தான் ..
பகுதி 4 - காதல் கல்யாணம் படிக்க
தொடரும் ......
0 Comments