6/recent/ticker-posts

தனுஷ் 55 படத்தின் பூஜை - அமரன் வெற்றி இயக்குனரிடம் இணைந்த நடிகர் தனுஷ்

தனுஷ்  55 படத்தின் பூஜை - அமரன் வெற்றி இயக்குனரிடம் இணைந்த நடிகர் தனுஷ் 



தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ள நடிகர் தனுஷ், தனது தனித்துவமான நடிப்பின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர். நடிப்பில் மட்டுமல்லாமல் இசை, பாடல், தயாரிப்பு,இயக்கம் எனப் பல்வேறு துறைகளில் தன் திறமையை நிரூபித்திருக்கும் நடிகர் தனுஷ், தமிழ் சினிமாவின் பல்வேறு பரிமாணங்களில் ஆழம் கண்டுள்ளார். இன்றைக்கு நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவைத் தாண்டி, இந்தியா முழுவதும் தன்னால் உருவாக்கப்பட்ட ரசிகர்கள் வட்டத்தில் விளங்குகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவர்களுடன் தற்போது கைகோர்த்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் அமரன்.

அமரன் படம் தீபாவளி அன்று வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்த படத்துக்கு நல்ல வரவேற்ப்பு இருந்தது. இந்த படம் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை தழுவி எடுக்க பட்ட படம்.


இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் தனுசுடன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இணைந்துள்ளார். நடிகர் தனுஷின் D55 படமாக வெளிவா இருக்கும் இந்த படம் கோபுரம் பிலிம் அன்பு செழியன் அவர்கள் தயாரிக்க , இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.




Post a Comment

0 Comments