ரிஷிகேஷ் சிவபுரி கங்கை கரையில் எளிமையாக நடந்த நடிகை ரம்யா பாண்டியன் திருமணம்.

தமிழில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான டம்மி பட்டாசு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். நடிகை ரம்யா பாண்டியன் ரிஷிகேஷ் சிவபுரி கங்கை கரையில் இன்று தனது காதலரை திருமணம் செய்தார்.
2015 ஆம் ஆண்டு வெளிவந்த டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து ஜோக்கர் என்கின்ற திரைப்படத்தில் நடித்த பலரின் கவனத்தை ஈர்த்தார்.
தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து பிரபலமானதை காட்டிலும் மொட்டை மாடி போட்டோசூட் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர்தான் ரம்யா பாண்டியன்.
அதன் பிறகு வெப் தொடரிலும் . சின்னத்திரையில் குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டிருக்கிறார்.நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா பயிற்சியாளரான லவ்ல் தவானுக்கும் இடையே பழக்கம் ஏற்பட நாளடைவில் காதலாக மாறியிருக்கின்றது.
நடிகை ரம்யா பாண்டியன் - லவ்ல் தவானுக்கும் ரிஷிகேஷ் சிவபுரி கங்கை கரையில் இன்று தனது காதலரை திருமணம் செய்தார்.
இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தார்கள். ரம்யா பாண்டியனின் நெருங்கிய உறவினரான நடிகர் அருண்பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்கள்
0 Comments