ஊர் விலகி ‘பிரிவு’ என்ற முடிவையும் சமமாய் மதிக்கவேண்டும் - இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் பதிவு
தற்போது திரைத்துறையில் விவாகரத்து என்பது இப்போது பேசும் பொருளாக மாறிவருகிறது. சோசியல் மீடியாக்களில் அவர்கள் விவாகரத்து அறிவிக்கும் போது அவரின் ரசிகர்கள் மிகப்பெரிய அதிர்ச்சி அடைகிறார்கள்.
சமீபத்தில் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா, ஜெயம் ரவி - ஆர்த்தி ஜி வி பிரகாஷ் - சைந்தவி, இன்று இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் - சாய்ரா என தங்களது விவாகரத்தை அறிவித்தனர் .
இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் பிரிவு என்பது பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில்
இசை ஸ்வரங்கள் பிரிவதால் தான் , பிறக்கும் ஒரு நாதமே… குடைக்குள் மழை’ நானெழுதி கார்த்திக் ராஜா இசைக்க, இசையே பாடியது. பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல , புதிய அமைதியாகவும் பிறக்கலாம். நெருக்கம் நிகழ்த்திய சொர்க்கத்தை விட, மூச்சு முட்டும் புழுக்கமாகவும் மாறியதை சற்றே மாற்றி, விலகி நின்று அவரவர் விருப்பம் போல வாழ இனி(ய) வழியுள்ளதா என சம்மந்தப் பட்டவர்கள் ஆராயலாம். ஊர் கூடி உறவை கொண்டாடி வழியனுப்புதல் போலே, ஊர் விலகி ‘பிரிவு’ என்ற முடிவையும் சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும்!
0 Comments