முதல் நாள் காட்சி YouTube Channel-களுக்கு தடை- தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முக்கிய முடிவு
திரையரங்களில் முதல் நாள் காட்சி முடிந்தபின், YouTube Channel மற்றும் சமூக வலைத்தளங்களில் படத்தின் விமர்சனங்கள் வெளிவருவதால் படங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் வெளிவந்த கங்குவா படத்திற்கு மிகவும் கடுமையான விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிந்தது.
தமிழகத்தில் புதிய படங்களின் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு போடுகிறார்கள் ஆனால் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் புதிய தியேட்டர்களில் புதிய படங்களின் சிறப்பு காட்சி காலை 4 மணிக்கே போடுகிறார்கள்.
இதன் காரணமாக அங்கு செல்லும் யுடியூப் சேனல்கள் ரசிகர்களிடம் கருத்தை கேட்டு 7 மணிக்கே அதை ஒளிபரப்பி விடுகிறார்கள். தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி வெளியாகும் முன்பே படத்தின் விமர்சனம் வெளியாகிறது.
இதனால் ஒரு சில படங்களுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வெளியாகி படத்தின் வசூலை பெரிதும் பாதிக்கிறது. இப்படி தான் சமீபத்தில் வெளியான இந்தியன் 2, வேட்டையன், சூர்யாவின் கங்குவா போன்ற படங்களை எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. இதிலும் தற்போது வெளியான கங்குவா படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் மோசமாக விமர்சித்தனர்.
தற்போது அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் திரையரங்கு வளாகத்தில் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த YouTube Channel-களும் எடுக்க தடை செய்ய வேண்டும் எனவும் , அதற்க்கு ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்" என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
0 Comments