6/recent/ticker-posts

விடாமுயற்சி VS குட் பேட் அக்லி - ரிலீஸ் உறுதி செய்த ஓவர்சீஸ் விநியோகஸ்தர்கள்

விடாமுயற்சி VS குட் பேட் அக்லி - ரிலீஸ் உறுதி செய்த ஓவர்சீஸ் விநியோகஸ்தர்கள்



நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் துணிவு.

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. அதனை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக அஜித் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை.

இப்போது விடாமுயற்சி, குட்க பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் தயாராகும் விடாமுயற்சி ரிலீஸ் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகிவிட்டார். இப்படத்தில் இருந்து நடிகர் அஜித்தின் லுக் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

வருகிற ஜனவரி 10ம் தேதி வெளியாக இருப்பதாக வெளிநாட்டு விநியோகஸ்தர்களிடம் இருந்து தகவல் வந்துள்ளது.

Post a Comment

0 Comments