6/recent/ticker-posts

நவம்பர் 29 ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது - ஆர்.ஜே.பாலாஜி புதிய திரைப்படம்

நவம்பர் 29 ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது - ஆர்.ஜே.பாலாஜி புதிய திரைப்படம் 



ஆர்.ஜே.பாலாஜி – ரேடியோவில் இருந்து சினிமா வரை ஒரு வெற்றிகரமான பயணம். ஆர்.ஜே.பாலாஜி என்ற பெயரை கேட்காதவர் யாருமில்லை. தமிழ் சினிமா மற்றும் காமெடி உலகில் தனித்தன்மை கொண்டவர் ஆர்.ஜே.பாலாஜி.

ஆரம்பத்தில் ஆர்.ஜே.பாலாஜி காமெடியில் அதிக ஆர்வம் கொண்டவர் என்று தெரியாது; அவர் ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்வைப் புதுமையுடன் தொடங்கினார்.

எப்.எம்-ல் இருந்து படிப்படியாக சினிமாவில் நுழைந்த அவர் காமெடி நடிகராக வலம் வந்தார். சினிமாவிலும் காமெடியனாக மக்களின் மனதில் இடம் பிடித்தார். நானும் ரவுடி தான், வடகரி, இவன் தந்திரன், கீ உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.



பின்னர் கதாநாயகனாக களமிறங்கிய ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி, ரன் பேபி ரன், வீட்ல விசேஷம், மூக்குத்தி அம்மன், சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ஆர்.ஜே.பாலாஜி சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் நடித்து வரும் படம் சொர்க்கவாசல் . இன்று இந்த சொர்க்கவாசல் படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் 29 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.

Post a Comment

0 Comments