பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் அமரன் - மகிழ்ச்சியில் அமரன் படக்குழு
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் என்றால், அது சிவகார்த்திகேயன் தான். தன்னுடைய தனித்துவமான நடிப்பு, நகைச்சுவை உணர்வு மற்றும் அன்பான தன்மை மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். அவருடைய பயணத்தின் ஆரம்பம் மிக சாதாரணமாக இருந்தாலும், இன்றைய தினம் அவர் ‘அமரன்’ போன்று தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும் நட்சத்திரமாக மாறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த அமரன் திரைப்படம் 200 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம். மேஜர் முகுந்த் வரதராஜர் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்கள்.
சிவகார்த்திகேயன் நடித்த எந்த திரைப்படமும் செய்யாத வசூல் சாதனைகளை அமரன் படம் செய்து வருகிறது. படத்தின் வசூல் அதிகரித்து வந்த நிலையில் 9வது நாளில் படம் மொத்தமாக 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
0 Comments