6/recent/ticker-posts

சத்தம் இல்லாமல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்த காரியம் - ஆச்சரியத்துடன் பார்த்த திரைபட சங்கம்.

சத்தம் இல்லாமல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்த காரியம் - ஆச்சரியத்துடன் பார்த்த திரைபட சங்கம்.




சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக வலம் வந்து கொண்டு இருக்கின்றார்.இவரது தந்தை தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் நடிகராக இருப்பவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

பல போராட்டங்களை கடந்து வந்தவர். இன்று தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் அனைவரும் வியக்கும் அளவுக்கு உச்சத்தை அடைந்திருக்கிறார் .இவருடைய மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்த ஒரு காரியம் இன்று ஒட்டுமொத்த திரைப்பட சங்கத்தையே ஆச்சரியப்படவைத்தது மட்டும் இல்லாமல் பாராட்டுகளையும் பெற்று வருகின்றார்.

இந்த நிலையில்  திரைப்பட இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளின் கல்வி செலவுக்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆண்டதோறும் 10 லட்சம் நன்கொடையாக அளிப்பதாக உறுதி அளித்திருக்கிறார். இந்த முன்னெடுப்பின் முதற்கட்டமாக 5 லட்சத்துக்கான காசோலையை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் ஆர் வி உதயக்குமாரிடம் வழங்கி இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.


இதை நான் ஆண்டுதோறும் செய்ய விரும்புகிறேன். அதுவும் என்னுடைய சொந்த காசில் நான் செய்ய ஆசைப்படுகிறேன். இது என்னுடைய பெருமை என்றும் கருதுகிறேன். இயக்குனர் சங்கத்தில் எத்தனையோ உதவி இயக்குனர்களின் பிள்ளைகள் கல்வி செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வருவது என் காதுக்கு தெரியவந்தது என பேசி இருந்தார். இவர் பேசியதைக் கண்டு அருகில் அமர்ந்த ஆர்வி உதயகுமார் ஆர் கே செல்வமணி அனைவரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

Post a Comment

0 Comments