6/recent/ticker-posts

சில்லுனு ஒரு காதல்

சில்லுனு ஒரு காதல்


ஏற்காட்டில் அன்று வானில் ஏதோ அதிசயம் நடந்தது போல , அழகிய சாரல் மழையில் ஏற்காடு தனது குளிர்ந்த காற்றை சுவாசித்து கொண்டிருந்தது.


 
ராம் தனது பெண் தோழியான சீதைவை எதர்ச்சியாக அன்று பார்த்தான். (அவர்கள் இருவரும் கல்லூரி காலத்தில் ஒன்றாய் படித்தவர்கள். )

ராம், தனது கல்லூரி வாழ்க்கை நினைத்து பார்த்தான்.அவன் கண்ணிலிருந்து வந்த கண்ணீர் துளிகள் அந்த மலைச்சாரலில் கரைய தொடங்கியது. அவன் கண்களை மூடினான்.)

அப்போது . ராம் எப்படி இருக்கிறாய் என்று ஒரு குரல்,

ராம்: கண் திறந்து பார்க்கும் போது அவனது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. காரணம் அவன் எதிரில் சீதா.(ராம் அவளை பார்த்து கொண்டிருக்க)

சீதா: ஹே ராம், என்ன ஆச்சி .. எப்படி இருக்கிறாய். என்று கேட்க

ராம்: நன்றாக இருக்கிறேன், நீ எப்படி இருக்கிறாய். எவ்ளோ மாதங்கள் ஆகீற்று உன்னை பார்த்து.

சீதா: நான் நன்றாக இருக்கிறேன், ஆமா நிஜமாக தான் கல்லூரியில் கடைசி நாள் உன்னை பார்த்தேன். அன்று உன்னிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன் . ஆனால் நடக்கவில்லை.

ராம்: நானும் தான், நிறைய முறை உன்னிடம் ஒன்று கூற வேண்டும் என்று முயற்சி செய்தேன். ஆனால் நடக்கவில்லை.

சீதா: நீ மட்டும் தான் இங்கு வந்தாயா?

ராம்: ஆமாம், எப்போதாவது மனது சரி இல்லை என்றால் இங்கு வருவேன். ஆமாம் நீ.

சீதா : நான் என் தோழியொடு வந்தேன். ஆனால் அவள் தனது காதலனை பார்க்க சென்று விட்டால்.

ராம்: அப்படியா,ஏன் நீ யாரையும் காதலிக்கவில்லையா .

சீதா: இன்னும் இல்லை, அவனிடம் இன்னும் என் காதலை நான் சொல்லவில்லை .

ராம்: ஏன் ?, யாரு அது ?

சீதா: அவன் தான் முதலில் சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அவன் இப்போது வரை சொல்லவில்லை. (தனது காதலை மறைமுகமாக வெளிப்படுத்தினாள்)

அதை புரிந்து கொண்டான். ஆனாலும் அமைதியாக இருந்தான். (அவனுக்கு சீதா தான் முதலில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் )

சீதா: ராம், இப்படி ஒரே இடத்தில் எவ்வளவு நேரம் இருப்பது. உனக்கு பிரச்சனை எதும் இல்லை என்றால். அந்த மலையின் உச்சிக்கு சென்று வரலாமா?

ராம்: இதுல எனக்கு எதும் இல்லை. வா போகலாம் (இருவரும் நடக்க ஆரம்பித்தனர்)

(அந்த மழையிலிருந்த குளிரும், காதலின் ஆசைகளும் கலந்து ராம் மற்றும் சீதாவுக்கும் இடையே ஒரு புதிய காதலின் தொடக்கத்தை உருவாக்கியது.)

ராம் : சீதா , இந்த மழையில் உன்னோடு இருக்கும் இந்த நிமிடங்கள்,என் வாழ்வில் என்றும் மறக்க முடியாதவை.

சீதா : நீ இப்படி ஒரு அழகான வார்த்தையை சொல்லும்போது, ராம் , என் இதயம் வேகமாக துடிக்கிறது. உண்மையில், இந்த நிமிடங்கள் எனக்கான பரிசு.

(அந்த சின்ன சாலையில் இருவரும் மட்டுமே. மழை துளிகள் அவற்றின் தோலைத் தொட, இருவருக்கும் மனதில் சந்தோஷம் பரவியது . ராம் தனது காதலை சொல்ல நினைத்து )

ராம் : சீதா. என்று கூப்பிட்டான் .

சீதா: சொல்லு ராம்.

ராம்: ஆனால் நீ ஏதாவது தவறாக நினைத்துக்கொண்டாள்.

சீதா: அதுலாம் எதும் இல்லை. நீ சொல்லு என்றாள்.

(அந்த மலையின் பசுமை , அந்த குளிர்ந்த காற்றுடன் சரால் இருவரும் தங்கள் காதலை சொல்ல முன்வந்தனர்.)

ராம்: சீதா, நீ என்னுடைய கவிதை. உன்னோடு பேசும் ஒவ்வொரு நொடியும் என் மனதில் கவிதையாகவே பதிகிறது.

சீதா : என்ன கவிதையா? யாரு நானா? நீ என்னை இவ்வளவு உயரமாகப் பார்கிறாய் என்று நினைக்கவில்லை. நான் மிகவும் சாதாரணமானவள் தான்.

ராம்: அமைதியாக ? நான் உன் கண்களை பார்த்தவுடனே என் மனம் முழுவதும் கவிதைகளால் நிரம்பிவிடுகிறது. உன் புன்னகை என் வாழ்வின் சோகங்களை மறந்து என் சந்தோஷத்தையும் ஒளிரச் செய்கிறது.

(சீதா சின்ன சிரிப்புடன் ராமை பார்த்தாள். அவன் சொல்லும் வார்த்தைகளின் மீது அவளுக்கு முழு நம்பிக்கை ஏற்படுகிறது)

சீதா : இது எல்லாம் உண்மையா ராம் ? நான் அப்படி எதுவும் செய்யவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் நீ இப்படி சொல்கிறாய்?.

ராம் : சீதா , நீ செய்ததுதான் எல்லாம். உனது அன்பு, பாசமான பார்வை, உன் காதல் நிறைந்த வார்த்தைகள்... இது மட்டும் என்னை மாற்றிவிட்டது. என உன்னிடம் இல்லாதது எதுவும் இல்லை.

(சீதா அவனை நெருக்கமாக நோக்கினாள். அவனது கண்களில் கண்ணீர் துளிகள் ஒளிந்துகொண்டிருந்தன.)

சீதா: நான் இவ்வளவு முக்கியமானவளா, ராம் ? என் அன்பால் உன்னிடம் இத்தனை மாற்றம் வந்துவிட்டதா?

ராம்: ஆம், சீதா . நீ தான் எனக்கு வாழ்வில் சந்தோஷம் , கனவுகள், காதல் என்று அனைத்தையும் கொடுத்தாய். உன்னோடில்லாமல் நான் என்னவாக போகிறேன் என்று தெரியாது."

(சீதா சலனமில்லாமல் ராமை பார்த்தாள். அவளின் இதயத்தில் இருந்த தடை உடைந்தது.)

சீதா : "நீ எனக்கு சொல்வதை நம்ப முடியவில்லை. நான் ஒரு சாதாரண பெண், எளிமையான கனவுகளுடன் வாழ்கின்றேன். ஆனால் நீ என்னை இவ்வளவு பெரிய கனவுகளாய் பார்க்கிறாய். ஆனால் உன்னுடன் எப்படி இருப்பேன் என்று புரியவில்லை.

ராம் : சீதா , உன் எளிமையில் தான் எனக்கு பிடிக்கும் . எனக்கு வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறது என்று உணர்த்தியவள் நீ . என் கவிதைகளுக்கு நீயே உயிர் கொடுத்தாய்.

(அவள் மெதுவாக ராமின் கையைப் பிடித்தாள். அவன் சொல்லும் வார்த்தைகள் அவளின் இதயத்தை முழுமையாகக் கவர்ந்துவிட்டது.)

சீதா : "நீ இப்படிப்பட்ட நபராக இருக்கிறாய் என்று நான் நினைக்கவில்லை. உன்னோடு இந்தப் பயணத்தில் நான் மிக சந்தோஷமாக இருக்கிறேன்."

ராம் :"இந்தப் பயணம் நமக்கு முடிவில்லை சீதா . நாம் இருவரும் சேர்ந்து பல யுகங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

(அந்த நிமிடத்தில் மழை நின்று விட்டது. ஆனால் அவ்விடத்தில் இருந்த சின்ன குளிர், இருவருக்கும் மனதைக் குளிரச் செய்தது.)

சீதா :ராம் , இந்த காதல் எவ்வளவு நியாயமானது என்று தெரியவில்லை. ஆனால் இது எனக்கு மிக உயர்ந்தது போல உணர்கிறேன்."

ராம் : சீதா அது காதலின் மகிமை. இது நமக்குள் இருக்கும் அன்பை காட்டுகிறது. உன் இதயத்தில் நான் ஒரு இடத்தை பிடித்துவிட்டேன் என்பதை நினைக்கும் போது எனக்கு சந்தோஷமாக உள்ளது.

(இருவரும் மௌனமாயிருந்தனர். ஆனால் அந்த மௌனம் கூட, அவர்களின் காதலை வெளிப்படுத்தியது.)

சீதா : ராம் , இந்த காதல் எது வரை போகும் என்று தெரியவில்லை. ஆனால் நான் எப்போதும் உன்னோடு இருக்க விரும்புகிறேன் , அது நடந்தால் போதும்.

ராம்: நீ இப்போதே என்னிடம் தான் இருக்கிறாய், சீதா . அது எனக்கு போதும். நம் காதல் நம்மிடம் தான் இருக்கும். அது நம் இருவரையும் இணைந்திருக்கும்.

(அந்த மலைப்பாதையில், அந்த மலையின் சுத்தமான காற்றை போல, இருவரின் மனசுகள் மிகப் பரிசுத்தமாக இருந்தன. அந்த காதல் மட்டுமே அவர்களைக் கவர்ந்தது.)

சீதா : நம் காதல் சிறந்தது, ராம் . நாம் காதலுக்கு முடிவு இருக்கக் கூடாது. இப்போது இருக்கிற காதல் நம் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டும்."

ராம்: ஆமாம், சீதா . நம் காதலின் புனிதத்தை நாமே உணர்ந்து கொண்டு , வாழ்நாள் முழுவதும் அதை பாதுகாக்க வேண்டும் .

(இருவரும் மலை உச்சியை அடைந்தனர். அங்கு புல்வெளியில் இருவரும் அமர்ந்தனர். அப்போது சீதா ராமின் தோள்களில் சீதா சாய்ந்து கொண்டாள்.)

பகுதி 2 படிக்க - காதல் கல்யாணம் 


(இந்த கதை பற்றி உங்களுடைய கருத்தை தெரியபடுத்தவும். )

Post a Comment

1 Comments