லக்கி பாஸ்கர் படத்தின் ப்ரமோஷன் விழாவில் தேம்பி அழுத பெண்..
துல்கர் சல்மான், மலையாள சினிமாவை மட்டுமல்ல, இந்திய திரைப்பட உலகையே ஆச்சரியப்படுத்திய ஒரு திறமைசாலி நடிகர். அவரது பெயரே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தும். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் துல்கர் சல்மான் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
2014-ஆம் ஆண்டு, மனிரத்னத்தின் "ஓ காதல் கண்மணி" என்ற படத்தில் தனது ரொமான்டிக் ஹீரோவாக வெளிப்பட்டார். இந்த படத்தில் நித்யா மேனன் உடன் நடித்த துல்கர் சல்மான், தமிழ் ரசிகர்களின் மனதை வென்றார்.
அஜீத் சார் மாதிரி எல்லாம் வர முடியாது , நான் மிக பெரிய அஜீத் சார் ரசிகன் - துல்கர் சல்மான் வெளிப்படையான பேச்சு
தற்போது இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் படம் லக்கி பாஸ்கர் , இயக்குனர் வெங்கி அடலூரி இயக்கதில் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது.
லக்கி பாஸ்கர் படத்தின் ப்ரமோஷன் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பெண் ரசிகை ஒருவர் துல்கர் சல்மானை பார்த்து அழுது கொண்டு இருந்தார். இதை நிகழ்ச்சி தொகுப்பாளர் துல்கர் சல்மானிடம் சொல்ல ,அவர் உடனே அந்த பெண்ணை அழைத்து பேசினார். அந்த பெண் உங்களுடைய மிக பெரிய ரசிகை என்றும் உங்களுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்க உடனே போட்டோ எடுத்து கொடுத்தார்.
0 Comments