நடிகர் விஜயின் அரசியல் பற்றி இயக்குனர் ஆர்கே செல்வமணி ஓபன் டாக்
தமிழ் சினிமாவின் புதிய யுகத்தை உருவாக்கியவர்களில் ஒருவர் ஆர்கே செல்வமணி. இவர் தனது படைப்புகளில் தைரியமான சோதனைகளை செய்தவராகவும், சமூக அரசியல் விவகாரங்களை தைரியமாக படம் பிடித்தவராகவும் அறியப்பட்டார்.
தமிழ் திரையுலகில் ஆர்கே செல்வமணி திரைப்பட தொழிற்சங்கத்தில் ஒரு முக்கியமான தலைவராகவும் இருந்தார். திரைப்பணியாளர்களின் உரிமைகள், ஊதிய விவகாரங்கள் மற்றும் தொழிலாளர் நலன்களைப் பற்றிய அவசர கோரிக்கைகளை அவர் பலமுறை முன்வைத்தார்.
நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27 ஆம் தேதி நடைபெறயுள்ள நிலையில் ஆர்கே செல்வமணியிடம் நடிகர் விஜயின் அரசியல் பயணத்தை பற்றியும் ,மீண்டும் நடிகர் விஜய் நடிப்பாரா என்று கேள்விகள் கேட்கபட்டது.
அதற்க்கு அவர் விஜய் மிகச்சிறந்த மனிதர், விஜய் இல்லாதது திரைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு, அரசியல்ல ஜெயிக்காம சினிமாவுக்கு வரமாட்டாரு, நான் பழகிய வரைக்கும் 100% சொன்ன சொல்லைக் காப்பாற்றக் கூடியவர்..
0 Comments