6/recent/ticker-posts

தலைவன் தன் ரசிகர்களை வழி நடத்தணும், முட்டாளாக வைத்திருக்க கூடாது - கங்குவா விழாவில் நடிகர் போஸ் வெங்கட்

தலைவன் தன் ரசிகர்களை வழி நடத்தணும், முட்டாளாக வைத்திருக்க கூடாது - கங்குவா விழாவில் நடிகர் போஸ் வெங்கட்



கங்குவா படத்தின் ஆடியோ லாஞ்ச் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். இந்த விழாவில் நடிகர் போஸ் வெங்கட் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. என்ன சொல்றாருன்னு பாருங்க.

இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் இருக்கிறார்கள். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

ஒரு தலைவன் ஐஏஎஸ், போலீஸ், எழுத்தாளர், மருத்துவர் என்று எங்கிருந்தாலும் வரலாம். ஆனால், ஒரு தலைவனுடைய அடிப்படை ரசிகனை முட்டாளாக வைத்திருக்க கூடாது. அவனை அறிவாளியாக வேண்டும். அவன படிக்க வைக்கணும், அறிவ வளர்க்கணும்.

தலைவன் தன் ரசிகர்களை வழி நடத்தணும். எப்படி வழி நடத்தணும்னா உங்களை மாதிரி வழி நடத்தணும். இவர் சூர்யாவைப் போல ஒரு தலைவன் தான் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறினார். இவர் நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் ஆன விஜயை பற்றி தான் சொல்கிறாரா என்பது போக போக தெரியும்


Post a Comment

0 Comments