6/recent/ticker-posts

பாசமே தெரியாது அந்த குழந்தைக்கு பயம் மட்டும் எப்படி தெரியும் - தலைவர் விஜயின் அரசியல் குட்டிக் கதை

பாசமே தெரியாது அந்த குழந்தைக்கு பயம் மட்டும் எப்படி தெரியும் - தலைவர் விஜயின் அரசியல் குட்டிக் கதை



தமிழக வெற்றி கழகம்: நடிகர் விஜய் தனது கட்சியை பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தினார். அதன் பின் கொடி மற்றும் கட்சி பாடல் வெளியிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தமிழக வெற்றி  கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று நடைபெறுவதாக இருந்தது. அதன்படி சரியாக 3:00 மணியில் மாநாடு தொடங்கியது. கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய மாநாடு பல லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் மிதந்தது.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் மாநாட்டில் 100 அடி உயர கொடி கம்பியில் கட்சியின் கொடியை ஏற்றினார்.

தனது தாய் தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் தனது உரையை தொடங்கிய தலைவர் விஜய். கட்சியின் கொள்கை தலைவர்களாக பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் ஆகியோரை அறிவித்தார்.

மாநாட்டின் கூட்டத்தை பார்த்து குட்டி கதை மூலம் தனது உரையை ஆரம்பித்த தலைவர் விஜய் முதன் முதலில் அம்மா என்ற குழந்தையின் குரல் கேட்டு அந்தத் தாய் எந்த மனநிலையில் இருக்கிறார் என்பது அனைவரும் அறிவார். ஆனால் அந்தக் குழந்தைக்கு அந்த நிலை என்னவென்று தெரியாது பால் குணம் மாறா பச்சிளம் குழந்தைக்கு பாசம் என்றால் என்னவென்று தெரியும், அதேசமயம் அந்தக் குழந்தையின் அருகில் ஒரு பாம்பு வருகிறது என்றால் பாசமே தெரியாது அந்த குழந்தைக்கு அந்தப் பாம்பை பார்த்து பயம் மட்டும் எப்படி தெரியும் குழந்தை இந்த பாம்பை கையில் எடுக்கத்தான் செய்யும். அந்தப் பாம்பு தான் அரசியல் குட்டிக் கதை மூலம் மாநாட்டில் தனது உரையை தொடங்கினார் தலைவர் விஜய்


Post a Comment

0 Comments