காதல் ஜோடியை பிரித்ததால் நடிகரை அறைந்த பெண் - தியேட்டரில் நடந்த பரபரப்பு சம்பவம்

அன்றைய காலத்தில் தான் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளை உண்மையென அந்த காலத்தில் பலரும் நினைத்து கொண்டிருந்தனர். அதில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களை பாராட்டியும் வில்லன் நடிகர்களை பல நிகழ்வுகள் நடைபெற்றது.
அந்த மாதிரி ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது.அக்டோபர் 18ஆம் தேதி லவ் ரெட்டி என்கின்ற தெலுங்கு படம் ரிலீஸ் ஆனது. லவ் ரெட்டி படம் முழுக்க உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த படத்தை ஸ்மரன் ரெட்டி என்பவர் இயக்கி இருந்தார். மேலும் ஷவானி அஞ்சன், ராமச்சந்திரா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் தியேட்டர்களில் மக்கள் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என பார்க்க படக்குழு சென்று இருக்கிறது.அப்போது ஒரு பெண் திடீரென மேடையில் ஏறி திடீரென என்.டி.ராமசாமி சட்டையை பிடித்து கன்னத்தில் அறைந்துவிட்டார்.
அவருக்கு தர்மஅடி விழுந்த நிலையில் அருகில் இருந்த மற்ற நடிகர்கள் அந்த பெண்ணை தடுக்க முயற்சித்து இருக்கின்றனர். ராமசாமியை அடிக்கும் போதெல்லாம் அவர் 'அவர்களை ஏன் சேர விடமாட்டாய்?' என்று கூறிக் கொண்டே அடித்தார். இந்த வீடியோ இணையதள பக்கங்களில் வைரலானது.
0 Comments