6/recent/ticker-posts

இயக்குனரை நம்ப மறுத்த சாய் பல்லவி - தனது ஆதாரத்தை கொடுத்து கால்ஷூட் வாங்கிய இயக்குனர்

இயக்குனரை நம்ப மறுத்த சாய் பல்லவி - தனது ஆதாரத்தை கொடுத்து கால்ஷூட் வாங்கிய இயக்குனர்


Sai Pallavi :சாய்பல்லவி என்ற பெயரை கேட்கும் போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நினைவிற்கு வருகிறார். சாய்பல்லவி, அவரது இயல்பான நடிப்பால், எளிமையான முகபாவனைகளால், அழகிய நடனம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளால் சினிமா உலகில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். அவருடைய பெயரை பயன்படுத்தாமல் தற்போதைய இந்திய சினிமாவை பற்றி பேச முடியாது.

சாய்பல்லவி, குழந்தை நடிகையாக "கஷ்தூரி மான்" என்ற தமிழ்த் திரைப்படத்தில் சிறிய ரோலில் அறிமுகமானவர். ஆனால் அவர் மீண்டும் சினிமா உலகிற்கு சாய்பல்லவி என்கிற பிரபல நடிகையாக வருவதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

"பிரேமம்" என்ற மலையாளத் திரைப்படம் சாய்பல்லவி கலை வாழ்வில் ஒரு திருப்பமாக அமைந்தது. நிவின் பாலியின் ஜோடியாக நடித்த சாய்பல்லவி, ஒரு கல்லூரி பேராசிரியராக, தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தார். அந்தப் படத்தில் அவரது மோகினி முகம், வெள்ளை சேலை மற்றும் எளிய குணம் தான் படத்தின் மையமாக விளங்கியது. "பிரேமம்" வெற்றியின் பிறகு, சாய்பல்லவி என்ற பெயர் மலையாள சினிமாவை தாண்டி தமிழில், தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்றது.



ஆனால் சாய் பல்லவி முதலில் பிரேமம் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம். திடீரென ஒரு நாள் இவருக்கு அல்போன்ஸ் புத்திர ஃபோன் கால் வர முதலில் அவரை இயக்குனர் தான் என நம்ப மறுத்திருக்கிறார் ஏதோ ஸ்பேம் கால் என்று நினைத்துவிட்டார்.


இதனால் இதனால் மீண்டும் கால் செய்து தான் ஒரு இயக்குனர் என்றும் நேரம் படத்தை தான் இயக்கி இருப்பதாகவும் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தன்னுடைய பெயரை கூகுளில் தேடி கன்ஃபார்ம் செய்து கொள்ளுங்கள். சாய் பல்லவி இருந்தும் மருத்துவம் படித்துவிட்டு நடிக்க வந்தவர்கள் கோலிவுட்டில் யாருமில்லை என்பதால் முதலில் தயங்கி இருக்கிறார்.

Post a Comment

0 Comments