என்னது கூத்தாடியா, கூத்தாடி என்றால் என்ன கேவலமான பெயரா - தரமான பதிலடி கொடுத்த தவேக தலைவர் விஜய்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின்முதல் மாநில மாநாட்டில் அவர் மீது வைக்கப்பட்ட எல்லா விமர்சனத்துக்குமே நேராக பதில் அளித்து இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தினை கொடுத்துள்ளது.
நான் கட்சியை அறிவித்ததில் இருந்தே என்னை கூத்தாடி விஜய், கூத்தாடி விஜய் என்று சொல்கிறார்கள். நம்ம ஊரில் வாத்தியார் எம்ஜிஆரையும், ஆந்திராவில் வாத்தியார் என் டி ஆரும் கட்சி தொடங்கிய போது அவர்களையும் இப்படித்தான் கூத்தாடி என்றார்கள்.
கூத்தாடி என்றால் கெட்ட வார்த்தையா என்ன? கூத்து இந்த மண்ணின் அடையாளம் தான். இல்ல நான் தெரியாம தான் கேக்குறேன் கேவலமான ஒரு பேரா கெட்ட வார்த்தையா கூத்து சத்யத்தை பேசும் ,சாத்தியத்தை பேசும் கொள்கையை பேசும் ,கோட்பாட்டை பேசும், கோவத்தை பேசும், சோகத்தை பேசும் ,அரசியலை பேசும் ,அறிவியல் பேசும் ,நல்லதை பேசும், உள்ளதை பேசும் ,உண்மையைப் பேசும் ,உணர்வோடு பேசும் இப்படியெல்லாம் அசிங்கபடுத்தினார்கள் அவமானப்படுத்தினார்கள்.
Also Read :இதற்காகத்தான் நான் அரசியலில் வருகிறேன்- என அரசியல் பயணத்தை தெளிவாக சொன்ன தவேக தலைவர் விஜய்
ஆனா கொஞ்சம் கூட கலங்காம கொஞ்சம் கூட கலங்காம ஒவ்வொரு வாய்ப்பாகும் ஒவ்வொரு சூழலுக்காக காத்திருந்து காத்திருந்து சுத்தி சுத்தி சுழன்று சுழன்று உழைச்சு உழைச்சு மேல வந்தவன் தான் கூத்தாடி. அப்ப கூட உழைப்பு மட்டும் தாங்க என்னோடது எனக்கு கிடைச்ச மட்டும் எல்லாத்துக்கும் காரணம் நான் இல்ல இன மக்களை நோக்கி கையை தூக்கி காட்ட மக்கள் சத்தத்தில் மாநாடு அதிர்ந்தது..
நான் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதும் அந்த ஊதியத்தை உதறி தள்ளிவிட்டு உங்களுக்காக வந்திருக்கிறேன். உங்கள் விஜயாக உங்களை நம்பி வந்திருக்கிறேன். என்று யாரும் எதிர்பார்க்காத வகைகள் மிகுந்த கோபத்துடனும் அதேசமயம் வார்த்தையில் பொறுப்புடனும் பேசினார் தலைவர் விஜய்
0 Comments