6/recent/ticker-posts

இதற்காகத்தான் நான் அரசியலில் வருகிறேன்- என அரசியல் பயணத்தை தெளிவாக சொன்ன தவேக தலைவர் விஜய்

இதற்காகத்தான் நான் அரசியலில் வருகிறேன்- என அரசியல் பயணத்தை தெளிவாக சொன்ன தவேக தலைவர் விஜய்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், பிரபு, சிபிராஜ் பல பிரபலங்கள் வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியா அனைத்திலும் இந்த தமிழக வெற்றி கழகத்தில் மாநாட்டை பற்றி பல செய்திகள் வந்தவனும் இருந்தது.

மிகுந்த  எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் லட்சக்கணக்கான பேர் பங்கேற்றனர் மாநாட்டு திடலில் மக்கள் வெள்ளத்தில் நடந்து வந்த விஜய் மீது கட்சிக் கொடிகளை பறக்க விட்டனர் அது அன்போடு எடுத்துச் தனது கழுத்தில் போட்டுக்கொண்டு விஜய்.

Read Also :பாசமே தெரியாது அந்த குழந்தைக்கு பயம் மட்டும் எப்படி தெரியும் - தலைவர் விஜயின் அரசியல் குட்டிக் கதை


இதுவரை வந்த அனைத்து செய்திகளுக்கும் பதில் தரும் வகையில் கூத்தாடினார் யார் இன்று தனது ஸ்டைலில் விளக்கம் கொடுத்த விஜய், அந்த காலத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கும், ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்டிஆர் அவர்களுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டதென்றும் அவர்கள் தான் பின்னாளில் மக்கள் மறக்க முடியாத தலைவர்களாக மாறி இன்று வரை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கு அந்த நிலைமை என்றால் எனக்கு இதெல்லாம் சாதனம் தான்.

பணத்தின் அளவு எல்லாம் ஓரளவுக்குத்தான் உங்களால் நான் நிறைய சம்பாதித்து விட்டேன் என்னை இந்த நிலையில் அமர வைத்த தமிழக மக்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்றுதான் அரசியலில் வந்துள்ளேன். இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் யார் என்று வெளிப்படையாக சொல்லிய விஜய் தனது கர்ஜனை பேச்சில் மாநாட்டை தெறிக்க விட்டார்

Post a Comment

0 Comments